


பொதுவாக அரசு பள்ளியில் படித்த அல்லது படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் திணறுவார்கள் என நாம் கேள்விபட்டிருப்போம். அதற்கு முக்கியமான காரணம் அரசு பள்ளிகளில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் இல்லை என சொல்லுவார்கள். ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் சரளாக ஆங்கிலம் பேசுவார்கள். இது தான் இதுவரை நாம் கேள்விபட்டது.
ஆனால் சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் சிறுவன் ஒருவன் ஆங்கிலத்தில் சரளமாக பேசி வருகிறான். அவன் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஆசிரியை ஒருவர் தமிழிலில் சொல்ல அதை எப்படி ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என சிறுவன் சொல்கிறான். அரசு பள்ளி வகுப்பறையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து அரசு பள்ளிகள் முன்னேறி வருவதாக குறிப்பிட்டு கருத்திட்டு வருகின்றனர்.


