• Sat. Oct 12th, 2024

பத்மஸ்ரீ விருதைப் பெற்றார் நடிகை சௌகார் ஜானகி.!

இந்தாண்டிற்கான (2022) பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். இதில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார்.

நடிகை சௌகார் ஜானகி 1950 இல் எல்வி பிரசாத் இயக்கிய தெலுங்குத் திரைப்படமான ஷாவுகாரு படத்தின் மூலம் பிரபலமானார் . இந்த படத்தின் மூலம் அவருக்கு ‘சௌகார்’ என்ற பெயர் கிடைத்தது. 70 ஆண்டுகளுக்கு மேலாக 400-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து புதிய சாதனை படைத்துள்ளார். புதிய பறவை திரைப்படத்தில் “பார்த்த ஞாபகம் இல்லையோ. பருவ நாடகம் தொல்லையோ” என்ற பாடல் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது! கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *