• Sat. Apr 20th, 2024

‘நம்ம ஊரு திருவிழா’ – தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி மாதம் 14,15,16 ஆகிய தேதிகளில், ‘நம்ம ஊரு திருவிழா” எனும்‌ தலைப்பில்‌ தமிழகத்தின்‌ பாரம்பரியமான கிராமியக்‌ கலைகளை வெளிப்படுத்தும்‌ கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது!

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்ற கலை பண்பாட்டுத்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில்‌ கிராமியக்‌ கலைஞர்களைக்‌ கொண்டு சென்னையில்‌ பிரம்மாண்டமான கலைவிழா நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதைத்‌ தொடர்ந்து, அமைச்சர்‌ தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில்‌ 04.09.2021 அன்று 2021-2022 ஆம்‌ ஆண்டு துறை மானியக்‌ கோரிக்கையின் போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்!

அதில், ‘தமிழர்‌ திருநாளான பொங்கல்‌ பண்டிகையினையொட்டி, தமிழகத்தினைச்‌ சார்ந்த பாரம்பரியக்‌ கலைகளின்‌ சிறப்பினை வெளிப்படுத்தும்‌ வகையில்‌, திரளான கலைஞர்கள்‌ பங்கு பெறும்‌ பிரம்மாண்ட கலைவிழா, ஆண்டுதோறும்‌ சென்னையில்‌ மூன்று நாட்கள்‌ நடத்தப்படும்‌. இதற்காக கலை பண்பாட்டுத்துறையின்‌ ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 லட்சம்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌” என்று குறிப்பிடப்பட்டுள்ளது! மேலும் இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது!

அரசாணையினை செயல்படுத்தும்‌ வகையில்‌ ”நம்ம ஊரு திருவிழா” எனும்‌ தலைப்பில்‌ தமிழகத்தின்‌ பாரம்பரியமான கிராமியக்‌ கலைகளை வெளிப்படுத்தும்‌ 500-க்கும்‌ மேற்பட்ட கலைஞர்களைக்‌ கொண்டு, சென்னையில்‌ 7 இடங்களில்‌ 14.01.2022, 15.01.2022, 16.01.2022 ஆகிய மூன்று நாட்கள்‌ கலை விழா நடைபெறவுள்ளது. மேலும், 7 வெளி மாநில கிராமியக்‌ கலைக்குழுவினர்‌ இவ்விழாவில்‌ பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது!

அதில், ‘தமிழர்‌ திருநாளான பொங்கல்‌ பண்டிகையினையொட்டி, தமிழகத்தினைச்‌ சார்ந்த பாரம்பரியக்‌ கலைகளின்‌ சிறப்பினை வெளிப்படுத்தும்‌ வகையில்‌, திரளான கலைஞர்கள்‌ பங்கு பெறும்‌ பிரம்மாண்ட கலைவிழா, பல்வேறு துறைகளின்‌ ஒத்துழைப்புடன்‌ ஆண்டுதோறும்‌ சென்னையில்‌ மூன்று நாட்கள்‌ நடத்தப்படும்‌. இதற்கென தொடரும்‌ செலவினமாக கலை பண்பாட்டுத்துறையின்‌ ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 லட்சம்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌” என்று குறிப்பிடப்பட்டுள்ளது! மேலும் இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது!

அரசாணையினை செயல்படுத்தும்‌ வகையில்‌ ”நம்ம ஊரு திருவிழா” எனும்‌ தலைப்பில்‌ தமிழகத்தின்‌ பாரம்பரியமான கிராமியக்‌ கலைகளை வெளிப்படுத்தும்‌ 500-க்கும்‌ மேற்பட்ட கலைஞர்களைக்‌ கொண்டு, சென்னையில்‌ 7 இடங்களில்‌ 14.01.2022, 15.01.2022, 16.01.2022 ஆகிய மூன்று நாட்கள்‌ கலை விழா நடைபெறவுள்ளது. மேலும், 7 வெளி மாநில கிராமியக்‌ கலைக்குழுவினர்‌ இவ்விழாவில்‌ பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *