தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் வரும் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த அரசு முடிவு செய்ததை கைவிடுமாறு ஊழியர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லுவோர் பாதிக்கப்படுவர். மேலும் சனிக்கிழமை முகாம் நடத்தினால் அதற்கான முன் ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமையே செய்ய வேண்டி வரும். இதனால் விழா காலங்களில் கூட அரசு உழியர்கள் தங்களது குடும்பங்களோடு நேரம் ஒதுக்கமுடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த சிறப்பு முகாமை தள்ளி வைக்குமாறு, தமிழ் நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, மற்றும் பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளனர்.