

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீட்டின் மேல் கூரை ஓடுகளை சீர் செய்ய முயன்ற இருவர் மின்சாரம் தாக்கி பலியாகினுள்ளனர். தென்தாமரைக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பால்பண்ணை அருகே ஆல்பர்ட் மாணிக்கராஜ் (65) என்பரவது வீடு அமைந்துள்ளது. வீட்டின் மேல் கூரை ஓடுகளால் வேயப்பட்டுள்ள நிலையில், சமீப நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக மேல் கூரை ஓடுகள் சேதமடைந்து காணப்பட்டுள்ளன. அதனை சீரமைக்க தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த பகவதியப்பன் (61) என்பவரை அழைத்து ஓடுகளை சீரமைக்க முயன்றுள்ளார். அப்போது அவர்கள் பயன்படுத்திய இரும்பு ஏணி அருகிலுள்ள மின் கம்ப பக்கவாட்டு கம்பியில் உரசியுள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து ஆல்பர்ட் மாணிக்கராஜ் (65) மற்றும் பகவதியப்பன்(61) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிகழ்விடம் வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கன்றுகுட்டி ஒன்று பலியாகியது குறிப்பிடத்தக்கது.
