• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிதாலுகா அலுவலகம் முன்பாக வாடிப்பட்டிவட்ட கிளை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையின் சீரழிவிற்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி அரசை கண்டித்து சோனம் வாங்கசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் சூசைநாதன் தலைமைதாங்கி தொடக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ் கண்டன உரையாற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தைமாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வம்முடித்து வைத்தார். முடிவில் வட்டக் கிளை பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.