• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வாக்கு இயந்திரங்களை கையாளும் அரசு தேர்தல் பணியாளர்கள், சீருடை அணிந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பேட்டி

ByG.Suresh

Mar 21, 2024

நாடாளுமன்ற தேர்தலின் போது, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில், வாக்கு இயந்திரங்களை கையாளும் அரசு தேர்தல் பணியாளர்கள், சீருடை அணிந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பேட்டி.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இவ்வாறு கூறினார். மேலும், இது போன்ற நடவடிக்கைகள் ஆள் மாறாட்டத்தை தடுக்க உதவும் என்பதன் அடிப்படையில், அரசியல் கட்சி பிரமுகர்களின் வேண்டுகோளை ஏற்று, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பின்பு இது நடைமுறைபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தேர்தல் வன்முறைகள் குறித்து பொதுமக்கள் வாட்ஷாப்பில் தகவல் தந்தால் சில நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மாவட்ட ஆட்சியர்,
தேர்தல் கமிஷன் அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பொதுமக்கள் வன்முறை குறித்த புகார்களை அளிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டார்.