சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நாடாளமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவிக்காத நிலையில் முதல் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் யாரும் வராததால் தேர்தல் அலுவலர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று இரண்டாவது நாளும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தேதி நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் முதல் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வருகை தரவில்லை. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. மேலும், சுயேட்சைகள் கூட வேட்பு மனு தாக்கல் செய்ய வராததால் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஆஷா அஜித்தின் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று அதிமுக, காங்கிரஸ் கட்சி உட்பட 7 வேட்பு மனு விண்ணப்பங்களை போட்டியிடவுள்ளவர்கள் மற்றும் அவரகளது பிரதிநிதிகள் வாங்கி சென்றனர்.