• Thu. Mar 23rd, 2023

நல்ல சிந்தனைகள்

Byவிஷா

Dec 24, 2021

கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு..
ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை.

உள்ளதை எப்போதும் உளியாக வைத்துக் கொள்..
சிலையாவதும், சிறையாவதும் நீ செதுக்கும் தன்மையை பொறுத்தது.

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே..
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.

முட்டாள் பழிவாங்க துடிப்பான்..
புத்திசாலி மன்னித்து விடுவான்..
அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான்.

உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட..
அவர்களை பாராமல் இருந்து பார்
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *