• Fri. Apr 19th, 2024

சென்னிமலை கூட்டுறவு சொசைட்டி பொன்விழா

சென்னிமலை ஜீவா தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க 50-வது ஆண்டு பொன்விழாவில் செய்தி துறை அமைச்சர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சி.எச். 28, ஜீவா தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமானது கடந்த 1973-ல் பதிவு செய்யப்பட்டு துவங்கியது. இச்சங்கத்தில் தற்போது 977 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 24 தறிகள் இயங்கி வருகிறது. சங்கத்தில் உறுப்பினர் பங்குத் தொகை ரூ 3905171 உள்ளது. சங்கம் சேமிப்பு கணக்கில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ 31280775.82 முதலீடு செய்யப்பட்டுள்ளது. சங்கத்தில் பெட்ஷீட், தலையணை உரை, படுக்கை விரிப்புகள் மற்றும் சால்வை ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
சங்கம் துவங்கிய நாள் முதல் தற்போது வரை 50 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. 2021-2022 ஆம் ஆண்டு நிகர லாபமாக ரூ54,46,391.68 ஈட்டப்பட்டு சங்க உறுப்பினர்களுக்கு சங்க உறுப்பினர்களுக்கு பைசா ஒன்றுக்கு ரூ27.67 விதம் உறுப்பினர்களுக்கு ரூ27,22,963 போனசாக வழங்கப்பட்டுள்ளது.
சங்கம் துவங்கி தற்போது 50&வது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சங்க பொன் விழாவாக கொண்டாடும் பொருட்டு 447 சங்க உறுப்பினர்களுக்கு ரூபாய் 2,19,924 மதிப்புள்ள நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஜீவா தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க துணை இயக்குனர் / மேலாண்மை இயக்குனர் மாதேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையாற்றினர். செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழா பேருரை ஆற்றி சங்க உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *