• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

த. வெ. க ஆட்சி அமைந்ததையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்..,

ByVelmurugan .M

May 11, 2026

தமிழகத்தில் 2026-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க பல்வேறு கட்சிகள் போட்டியிட்ட நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட 107 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் தவெக தலைவர் ச.ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சர் ஆனார்.

மேலும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானதை ஒட்டியும் அதனை தொடர்ந்து சிவக்குமாருக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்க வேண்டியும் இன்று பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலில் தவெக நிர்வாகி அய்யலூர் விஜய் தலைமையில்
தங்கத்தேர் இழுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பெரம்பலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வினோத், தெற்கு ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆலந்துரை, ஒன்றிய துணை அமைப்பாளர் பேபி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஷாலினி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர் வழிபட்டனர்.