• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க மோதிரத்தை சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சியினர் பரிசாக வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு பால் பழம் மற்றும் பிரட் உள்ளிட்ட உணவு பொருட்களை பரிசாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட தலைவர் ரங்கசாமி பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ் சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் ஐயப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.