• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை பவுனுக்கு ரூ.304 குறைந்தது

ByA.Tamilselvan

Jan 6, 2023

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குறைவருகிறது.சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.73.50-க்கு விற்கிறது. சென்னை: தங்கம் விலை கடந்த 31-ந்தேதி பவுனுக்கு ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை தொடர்ந்து உயர்ந்து பவுன் ரூ.42 ஆயிரத்தை நெருங்கியது. இதற்கிடையே நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41 ஆயிரத்து 824-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 190 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.73 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்கிறது.