• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இரண்டாவது நாளாக சரிந்த தங்க விலை

Byவிஷா

Nov 26, 2024

இரண்டாவது நாளாக தங்கம் இன்றும் சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையான உயர்வைக் கண்டது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,400-க்கும் விற்பனையானது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,920 அதிகரித்து அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1760 குறைந்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.7,080-க்கும், பவுனுக்கு ரூ.960 சரிந்து ஒரு பவுன் ரூ.56,640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையாகிறது.