• Tue. Dec 10th, 2024

தொடர்ந்து உயரும் தங்கம் விலை..,
அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Byவிஷா

Feb 2, 2023

நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற பட்ஜெட்டில் தங்கத்துக்கு வரி உயர்த்தப்பட்டுள் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800-க்கும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475-க்கு விற்கப்படுகிறது.. ஒரு சவரன் தங்கத்தின் விலை 44ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே போன்று ஒரு கிராம் வெள்ளியின் விலைரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.77.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது..