தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரூ. 55,480க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 480 உயர்ந்தது. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,520-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலையற்ற தன்மையால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வணிகம் பெருமளவு பாதிக்கும் அபாயம் உள்ளதாக தங்க வணிகர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.