மதுரை எஸ் எஸ் காலனியில் வீட்டில் தங்க வைர நகைகள் திருடிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
எஸ் எஸ் காலனி அருள் நகர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் அருண்ராஜ் 45 .இவரது வீட்டில் சம்பவத்தன்று முக்கால் பவுன் மோதிரம், வைரத்தோடு ஒரு ஜோடி, பணம் ரூ 5ஆயிரம் திருடு போய்விட்டது. இந்த திருட்டு குறித்து அவர் மதுரை எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது வீட்டு வேலைக்காரர் திருடியது தெரியவந்தது .வீட்டின் வேலைக்காரர் மதுரை தனக்கங்குளம் வெங்கடமூர்த்தி நகரைச் சேர்ந்த முருகன் மகன் பாண்டி 30 ஐ போலீசார் கைது செய்தனர்
தங்க- வைர நகைகள் திருட்டு- வேலைக்காரர் கைது
