• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பள்ளிகள் திறப்பு குறித்த ஆலோசனை…

Byகாயத்ரி

Jun 2, 2022

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளி கல்வித்துறை இன்று ஆலோசனை நடத்த உள்ளது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.