• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேவர் குருபூஜையின் போது அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு..!

Byவிஷா

Oct 27, 2021

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதற்கு சமுதாயத் தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்துகொண்டு சிவகங்கை திரும்பிய ஒரு தரப்பினர், அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


அதனைத் தொடர்ந்து கல்வீசி விட்டு தப்பிச் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு பேருந்துகளின் கூரை மீது பயணம் செய்ய போலீசார் அனுமதி மறுத்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.