• Fri. Apr 19th, 2024

கடும் குளிரில் ஆய்வு செய்யும் ஜீரோங் ரோவர்…

Byகாயத்ரி

May 8, 2022

செவ்வாய் கிரகத்தில் -100 டிகிரி குளிரில், சீன நாட்டின் ரோவர் விண்கலமானது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2020ஆம் வருடம் ஜூலை மாதம் செவ்வாய்கிரகத்திற்கு முதன்முறையாக தியான்வென்-ஒன் எனும் விண்கலத்தை அந்நாடு தனியாக அனுப்பியது. அத்துடன் அனுப்பப்பட்ட ஜீரோங் ரோவர் விண்கலம், 350 தினங்களுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இப்போது அங்கு குளிர்காலம் என்பதால் நண்பகலில் -20 டிகிரி குளிரும், நள்ளிரவில் -100 டிகிரி குளிரும் நிலவி வருகிறது. அங்கு புழுதி புயல் வீசி வருவதால் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சோலர் பேட்டரிகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற தினங்களில் வானிலை மேலும் மோசமடையும் என்பதனால் ரோவரின் பணிநேரம் குறைக்கப்பட்டதுடன், வானிலை சீராக இருக்கும் நேரத்தில் மட்டும் அது இயக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *