• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பாம்பு கடித்த சிறுமிக்கு 15 நாட்களாக தீவிர சிகிச்சை..,

ByS. SRIDHAR

Oct 23, 2025

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமி தனது வயலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவரை கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. இந்நிலையில் பாம்பு கடித்ததற்கான எந்தவித வடுவும் இல்லாத காரணத்தினால் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு இருப்பதாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவர்களும் வயிற்று பிரச்சனைக்காக மாத்திரை மருந்துகளை கொடுத்து அனுப்பி உள்ளனர் இருந்தும் சிறுமிக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் கிராமத்தில் உள்ள வைத்தியரிடம் காண்பித்து உள்ளனர். அங்கு காண்பித்தும் சிறுமியின் கண் மூடப்பட்ட நிலையில் ஆபத்தான சூழ்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவருக்கு வயிறு சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை மோசமானதை எடுத்து குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர் அரவிந்த் திருஞான சம்பந்தம் குழந்தையை பரிசோதனை செய்துள்ளார்.

அப்பொழுது தனது அனுபவத்தில் கண்ணாடி விரியன் பாம்பு இதுபோன்று எந்தவித அடையாளமும் இல்லாமல் கடிக்கும் திறன் கொண்டது எனவும் இதனால் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என முடிவு செய்து அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டார். பரிசோதனையில் கண்ணாடிவிரியன் பாம்பு கடித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டதை எடுத்து தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்ட குழந்தை 15 நாட்களாக தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் மென்முகில் டீன் கடைவாணி மருத்துவர் முகமது அலி ஜின்னா உன்னிடம் 15 மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் என 25க்கும் மேற்பட்ட குழுவினர் தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை சிகிச்சை வழங்கி தற்பொழுது சிறுமியானவள் நல்ல நிலையில் உள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் கலைவாணி குழந்தைகள் வயிற்று வலி என தெரிவித்தார்.

முதலில் முழுமையான பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் பெற்றோர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் சில நேரங்களில் பாம்பு கடித்ததற்கான எந்தவித அறிகுறியும் இல்லாவிட்டால் வயிற்று வலி அதனைத் தொடர்ந்து கண் மூடிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும் எனவும் எனவே இந்த விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் அரவிந்த் ஞான சம்பந்தம் அதிர்ச்சியான இந்த மருத்துவ முறைகள் எவ்வாறு சாத்தியமானது. என்ற பரபரப்பான தகவலை வழங்கினார் படித்த அல்லது நகர்புறத்தில் உள்ள பெற்றோர்கள் கூட இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் என்பது தெரியாத பட்சத்தில் மருத்துவரின் தகவல் அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் மருத்துவரின் திறமையை வெளிக் கொணரும் வகையில் இருந்தது.