• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 10, 2023
  1. “ஒருங்கிணைந்த உயிரி – சுத்திகரிப்பு நிலையங்கள்” திட்டம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முன் முயற்சியாகும் ?
    அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
  2. 2021 ஆம் ஆண்டுக்கான உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பின் 3 விருதுகள் எந்த மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ?
    தமிழ்நாடு
  3. ராஷ்ட்ரிய கிராம சுவராஜ் அபியானைச் செயல்படுத்தும் மத்திய அமைச்சகம் எது ?
    பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
  4. ககன்யான் வன்பொருளின் முதல் தொகுப்பை இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் (ISRO) ஒப்படைத்த நிறுவனம் எது ?
    HAL
  5. “Expanding Heat Resilience” – விரிவு வெப்ப நெகிழ்வு அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
    இயற்கை வளங்கள் பாதுபாப்பு கவுன்சில்
  6. ஒரு புதிய நூலான “The Maverick Effect ” எந்த இந்திய நிறுவனத்தின் உருவாக்கத்தை விவரிக்கிறது ?
    NASSCOM
  7. சமீபத்தில் எந்த இந்திய மாநிலத்தில், பெருங்கற்கால கல் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன?
    அஸ்ஸாம்
  8. பங்குச்சந்தைகளில் நிர்வாக விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கான SEBI குழுவின் தலைவர் யார்?
    குரு மூர்த்தி மகாலிங்கம்
  9. ஒற்றை வனவிலங்குகளின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரித்த முதல் நாடு எது ?
    ஈக்வடார்
  10. எந்த நாட்டுடன் இணைந்து “கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பணிக்குழு” – வை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது ?
    USA (அமெரிக்கா)