• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 11, 2022

1.முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?
கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
2.நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?
19 ஆம் நூற்றாண்டு
3.ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?
4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)
4.பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?
ஆண்கள்
5.இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)
6.தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?
வேலூர்
7.காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?
கயத்தாறு
8.நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா?
சரி
9.இந்தியாவின் செயற்கை கோள்?
INSAT
10.சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?
நிலவை ஆய்வு செய்ய