• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

வைரலாக ஜெனிலியாவின் கியூட் குத்தாட்டம்!

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து அவர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் நடிப்பில் உத்தமபுத்திரன் என தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் அவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ள இவர், தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்!

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் அவர் சல்மான் கானுடன் கியூட்டாக குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.