சென்னை போக்குவரத்து காவலர்களின் சேவையை பாராட்டும் வகையில் கவின்கேர் நிறுவனம் “கவின்ஸ் சியர்ஸ் ட்ராபிக் ஹீரோ” என்னும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

சென்னை ஐடிசி போலீஸ் ஜங்ஷனில், கடும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பரபரப்பான தலைநகரின் போக்குவரத்தை சீராகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்க அயராது பணியாற்றும் சென்னை போக்குவரத்து காவலர்களின் சேவையை பாராட்டும் விதமாக கவின்கேர் நிறுவனத்தின் முன்னணி டெய்ரி பிராண்டான கவின்ஸ், இன்று “கவின்ஸ் சியர்ஸ் ட்ராபிக் ஹீரோஸ்” என்னும் ஒருநாள் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.
இத்துடன் கவின்ஸ் பாதாம் பால் வழங்குவதுடன் தினசரி கட்டுப்பாட்டு பணிகளை மேலும் சீரமைக்கவும், சாலை வழி பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தவும் 10 பாரிகேட்களை (Barricades)கவின்ஸ் வழங்கியது.மேலும் சென்னை நகரம் முழுவதும் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு கவின்ஸ் பாதாம் பால் பாட்டில்களை நேரில் சென்று வழங்கியது. இனிவரும் காலங்களில் வழங்கவும் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்…
கே.ஜி. மல்லிகேஸ்வரன், கவின் கேர் நிறுவனத்தின் பெவரேஜ் பிரிவு வணிக தலைவர், கூறுகையில்….
கவின்ஸ் சியர்ஸ் ட்ராபிக் ஹீரோஸ் என்ற இந்த நிகழ்வு மூலம் வெப்பமழை புயல் போன்ற எந்த தடைகளையும் பொருட்படுத்தாமல் நமது சென்னை நகரத்தை பாதுகாப்பாகவும் சீராகவும் இயங்க அயராமல் பணியாற்றும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை கௌரவிக்கும் ஒரு சிறிய முயற்சியாக இன்று நடைபெற்றது.
எந்த சூழலிலும் ஓயாமல் சேவை புரியும் இவர்களது “விடமாட்டேன்” என்ற மனப்பான்மை தனியாத அர்ப்பணிப்பின் ஆழமான உணர்வை வெளிப்படுத்துகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து உயர்தரமான தயாரிப்புகளை வழங்கும் கவின்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.
சாக்லேட் பாதாம் ரோஸ் மற்றும் கேசர் என்ற நான்கு வகைகளில் கவின்ஸ் பிளேவர் மில்க் கிடைக்கிறது. நமது சமூக பங்களிப்பில் தான் ஒரு பிராண்டின் உண்மையான வெற்றியும் உயர்வும் அடங்கியுள்ளது என நாங்கள் ஆழமாக நம்புகிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அடையாறு வட்டத்தின் உதவி காவல் ஆணையர் கோடி செல்வன், கிண்டி போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.