

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மேலக்கால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சார்பாக குப்பைகளை சேகரிக்காமல் விடுவதால் பொதுமக்கள் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதும் மேலும் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி செல்வதுமாக உள்ளனர்.

இதனால் மேலக்கால் மதுரை செல்லும் முக்கிய சாலையின் ஓரங்களில் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்படுகிறது குப்பைகளில் தெரு நாய்கள் சர்வசாதாரணமாக உலாவுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் பயணம் செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகையால் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற ஊராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளி அதற்கான குப்பை கிடங்குகளில் கொட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இதனால் மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

