• Fri. Apr 18th, 2025

கஞ்சா வழக்கு குற்றவாளி சிறையில் அடைப்பு !!!

BySeenu

Apr 9, 2025

சாமியார் வேரிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வெள்ளியங்கிரி பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் சிறையில் அடைத்தனர். குற்ற வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தலை மறைவு குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் உத்தரவிட்டார்.

இதை அடுத்து தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் அன்னூர் சேர்ந்த மணிகண்டன் என்பவர் போதைப் பொருள் தடுப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.

மணிகண்டன் கோவை வெள்ளியங்கிரி அடிவாரத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் சாமியார் உடலில் கழுத்தில் மாலை அணிந்தபடி அங்கு உள்ள சாமியாருடன் மணிகண்டன் மறைந்து இருந்ததை கண்டு பிடித்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.