வைணவ கோவில்களில் பெருமாள் மற்றும் விநாயகரை மூலவராகக் கொண்டு இருகருவறைகளுடன் அமைந்த சிறப்புப்பெற்ற தனித்தன்மையான நூறுஆண்டுகள் பழமையான கோவில் கும்பாபிஷேகவிழா.
ஆண்டிபட்டியருகே சித்தயகவுண்டன்பட்டியில் நடைபெற்றது!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தையகவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான வைணவ ஆலயங்களில் அரிதான இரண்டு மூலவர்கள் மற்றும் இரண்டு கருவறைகளுடன் அமைந்த தனித்தன்மைபெற்ற பெருமாள்கோவில் கும்பாபிஷேகவிழா சிறப்பாக நடைபெற்றது.
நேற்று மாலை 6 மணிக்கு அனுக்ஞை மற்றும் விக்னேஷ்வர பூஜையில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்பு இரவில் தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு கணபதி ஹோமம் முடிக்கப்பட்டு கடம் புறப்பாடு தொடங்கி 108 புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரால் கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை 48 நாட்கள் விரதமிருந்து பட்டாச்சாரியார் சாமிகள் வைதீகமுறைப்படியும், ஆகமவிதிப்படியும் நடத்தினார்கள். விழாவில் தேனி மற்றும் மதுரை மாவட்டப் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கும்பாபிஷேக புனிதநீர் ஊற்றப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

