• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் காலா திரைப்பட பாணியில் போராட்டம்

ByA.Tamilselvan

May 30, 2022

மதுரையில் காலா திரைப்பட பாணியில் தூய்மை பணியாளர்கள் காலவரியின்றி போராட்டம்; மாநகரில் நூற்றுக்கும் அதிகமான டன் குப்பைகள் தேக்கம்
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 4,500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மதுரை மேலவாசல் குடியிருப்பு பகுதியில் அனைத்து சங்கங்களும் ஒன்றினைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தாங்களாகவே உணவு சமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும், உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காலவரையற்ற போராட்டத்தின் காரணமாக மாநகர் பகுதிகளில் சுமார் 350 டன் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 10 தினங்களுக்கு முன்பாக வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்பு குழு மற்றும் மேயர் என 3 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.