நிலக்கோட்டை வத்தலக்குண்டு மற்றும் மதுரை போகும் சாலையில் அடிக்கடி விபத்து நடந்து உயிர் பலிகள் ஏற்படுகிறது.
இனியும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முக்கிய இடங்களில் தடுப்பு அரன் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் இத்ரீஸ் அலி மற்றும் தளபதி ஆட்டோ சங்க தலைவர் சலாம் அலி ஆகியோர் நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது சம்பந்தமாக அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பு அரண்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்து தருகிறேன் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.