

விருதுநகர் மாவட்டம், சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளியில், பிறவி காது கோளாதோருக்கான இலவச அறுவை சிகிச்சை முகாம் நேற்று (பிப்.23) நடைபெற்றது. இம்முகாமினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தொடங்கி வைத்தார்.
சிவகாசி மைனாரிட்டி எஜூகேசன் டிரஸ்ட், மெட்ராஸ் நவெ ரிசர்ச் பவுன்டேஷன் மற்றும் இன்ஸ்ட்டியுட் ஆப் ஸ்பீச் ஹாண்ட் இயரிங் பிரைவட் லிமிட்டெட் இணைந்து நடத்திய, 6 வயதுக்கு உட்பட்ட பிறவி காது கேளாமைக்கான இலவச அறுவை சிகிச்சை முகாம், நேற்று 23.2.2025 ஞாயிற்றுக்கிழமையன்று, சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் A.M.S.G அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிவகாசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டார்.
நடைபெற்ற இந்த முகாமில் பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் மற்றும் மருத்துவக்குழுவினரால் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி தாளார் S.P.சிங்கராஜ், இந்திய தேசிய லீக் மாநிலச் செயலாளர் E..செய்யதுஜஹாங்கீர், இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகள், சிவகாசி மைனாரிட்டி எஜூகேஷன் டிரஸ்ட் நிறுவனர் T.செய்யதுஜாகீர்உசேன், செயலாளர் K.ரஹமத்துல்லா, பொருளாளர் S.மாபுபாட்ஷா, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் T.செய்யதுமுஸ்தபா மற்றும் M.D.முகம்மதுஇப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள், திமுக, முஸ்லீம் லீக், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர். இதில் 6 பயனாளிகள் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.



