• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா

ByN.Ravi

Jun 25, 2024

மதுரை குட்செட் தெருவில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா சிறப்பு கண் மருத்துவமனையில், இலவச கண்கண்ணாடி வழங்கும் விழா நடந்தது.
ஜூன்.22 ம் தேதி, மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா சிறப்பு மருத்துவமனை, நல்லோர் குழு மற்றும் மதுரை தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா மருத்துவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, திருமங்கலம் அருகே உள்ள ராஜபாளையத்தில் கடந்த மார்ச் மாதம் சிறப்பு பொதுமருத்துவ முகாம் நடத்தினர். அப்போது, கண்பரிசோதனை செய்து கொண்ட 24 தூய்மை காவலர்களுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது.
இதனைத் தொடர்ந்து, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம்மாநிலத் துணைச் செயலாளரும் மதுரை மாவட்ட வடக்கு மாவட்டத் தலைவருமான விஜயன்பன் கல்லானை சார்பில், 50 பயனா
ளிகளுக்கு கண் கண்ணாடிகளை இலவசமாக வழங்கினார். மேலும், கண்களின் பாதுகாப்பு நலன் சம்மந்தப்பட்ட கருத்துக்களை மருத்துவர் சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில், நடராஜன், தீபக், தினேஷ், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மதுரை
மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், நல்லோர் குழுவினர்கள் ரவி, அறிவழகன், துரை விஜய பாண்டியன் ராஜேஷ், ஜெகதீஸ்வரன், செல்வி, கல்யாணி மற்றும் ராய
பாளையம் ஊராட்சிமன்றத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.