• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பாரதிராஜாவின் மறைவால் பாக்யராஜ் 3 நாட்கள் சொல்ல முடியாத மனவேதனையில் இருந்தார்..,

ByKalamegam Viswanathan

Jun 28, 2026

இயக்குனர் பாக்கியராஜ் மறைந்த நிலையில் அவரது ரசிகர் மன்ற தலைவரான மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி மதுரை மஞ்சனக்கார தெருவில் வசித்து வரக்கூடிய அவர் பேசுகையில்,

கடந்த 50 ஆண்டுகளாக பாக்கியராஜின் ரசிகராக இருந்து வருவதாகவும் பாக்கியராஜ் மிகுந்த எளிமையாக பழகக் கூடியவர் எம்ஜிஆர் போல அனைவருக்கும் உதவி செய்யக்கூடிய நபர் சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொருவரையும் தட்டி கொடுத்து வேலை வாங்குவார் பல்வேறு நபர்களுக்கு உதவி செய்துள்ளார்.

பாக்யராஜ் அவர்களை கலை வாரிசாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அறிவித்தார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போலவே பல்வேறு கருத்துகளை தனது படத்தில் முன்வைத்தவர் பாக்கியா இதன் மூலமாக சிறந்த எழுத்தாளராக ஏராளமான வாசகர்களை கொண்டவர்.

பாக்யராஜ் போலவே அவரது குடும்பத்தினரும் மிகுந்த நெருக்கமாக பழகுவார்கள்.

பாக்யராஜ் எங்கள் வீட்டில் எனது மகன் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார்.

பாக்யராஜ் அவர்களின் உடைய படத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தனியாக அமர்ந்து பிரிவியூ ஷோ பார்ப்பார்.

நேற்று முன்தினம் தான் கோவாவில் இருந்து பேசினார்.

பாரதிராஜா அவர்கள் மறைவு பாக்யராஜ் அவர்களை மிகுந்த மன வேதனை ஆக்கியது.

இதனால் மூன்று நாட்கள் மதுரையிலே தங்கி இருந்தார் மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அந்த அளவிற்கு மிகுந்த மனவேதனையோடு அறையிலேயே இருந்தார் என தெரிவித்தார் பாக்யராஜ் அவர்களிடம் இல்லை, ஈடு செய்ய இயலாதது மிகுந்த கவலை அளிக்கிறது என தெரிவித்தார்.