• Tue. Dec 10th, 2024

இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… சந்திரசேகரராவ்

ByA.Tamilselvan

Sep 6, 2022

பாஜக அல்லாத அரசு அமைந்தால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் பேச்சு
2024ல் பாஜக அல்லாத அரசு அமைந்தால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது ” விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்காமல் அவர்களுடைய நிலங்களை கைப்பற்ற பாஜக சதி செய்கிறது . கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ12 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும் அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தர மறுக்கிறது என குற்றம் சாட்டினார்.