

இந்திய தேசிய லீக் தமிழ்நாடு கிளை சார்பில், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கு விழா சிவகாசி ராயல் மினி மஹாலில் விமரிசையாக நடைபெற்றது.

இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் தாதா மியான், வர்த்தக பிரிவு அணி செயலாளர் மீரான் மைதீன், மாநகர பொருளாளர் முகமது காசிம் இப்ராகிம் ,அமைப்பு செயலாளர் அம்ஜத்கான், விருதுநகர் விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் செல்வின் ஏசுதாஸ் ,மாவட்ட அமைப்பாளர் பைக் பாண்டியன், சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், திமுக நிர்வாகி சேட், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


