திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ssccgl போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மத்திய அரசின் பல்வேறு அரசாங்க அமைச்சகங்கள் துறைகள் மற்றும் அலுவலகங்களில் கிரேட் பி மற்றும் சி பிரிவுகளில் உதவி தணிக்கை அலுவலர் வருமானவரி ஆய்வாளர் அமலாக்க அலுவலர் புலனாய்வு அலுவலர் போன்ற உயர் பதிவுகளில் உள்ள 7500காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ssccgl தேர்வு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும் பெண்கள் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் ஏதுமில்லை. இதர பிரிவை சேர்ந்த ஆண்களுக்கு 100 ரூ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்தேர்வு குறித்து கூடுதல் தகவல்களை. http://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் இந்த ளளஉ உபட போட்டி தேர்வுக்கு தயாராக விரும்பும் தேர்வர்கள் பயன் பெரும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் 24:04:2023 அன்று தொடங்கப்பட உள்ளது.