அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-1 தேர்விற்கு 90 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1-க்கான முதல் நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
