• Wed. Dec 11th, 2024

திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி: போலி ஐஏஎஸ் கைது…

Byதரணி

Dec 5, 2023

திருச்சி மேலூர் சின்னக்கண்ணு தோப்பை சேர்ந்த கிருஷ்ணவேணி(45). ஸ்ரீரங்கம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
ஈரோடு, பெருந்துறை வடமுகம் சென்னிமலை பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(41). கிருஷ்ணவேணியின் ஜெராக்ஸ் கடைக்கு வந்து தன்னை ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து வந்து சென்றதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணவேணியின் மகனுக்கு இந்திய உளவுப்பிரிவான ”ரா” பிரிவில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார். இதை நம்பிய கிருஷ்ணவேணி, பல்வேறு தவணைகளில் ரூ.13 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை இதுகுறித்து திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்ட பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.