• Tue. Mar 25th, 2025

அமைச்சர் பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அணிவித்த அமைச்சர் கே.என்.நேரு..!

Byவிஷா

Nov 27, 2023

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அமைச்சர் கே.என். நேரு அணிவித்தது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, “உங்களுக்குதான் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது, இந்தாங்க கருங்காலி மாலை போடுங்கள்” என, சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு.
கூட்டம் முடிந்து வெளியே வந்த கே.என்.நேருவிடம், அவர் போட்டிருந்த கருங்காலி மாலையைப் பற்றி ஐ.பெரியசாமி கேட்டார். அப்போது தான் அணிந்திருந்த வெள்ளி கருங்காலி மாலையை ஐ.பெரியசாமியின் கழுத்தில் கே.என்.நேரு போட்டு விட்டார். அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு கருங்காலி மாலை போட்டு விடும் புகைப்படங்கள் தற்போது வலைததளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.