• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி

ByA.Tamilselvan

May 11, 2022

சேலத்தில் இயங்கிவரும் அழுதசுரபி நிறுவனம் சீட்டு நடத்தி மோசடி செய்துள்ளதாக பொதுமக்கள் புகார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன்  கூட்டுறவு சங்கம் லிமிடெட் என்ற நிறுவனம் சேலத்தில் இருந்து இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் தங்கள் நிறுவனத்தின் கிளைகளை அமைத்துள்ளது. அதன்படி ஜெயங்கொண்டம் கிளையில் பல வகையான சீட்டுகளை பொதுமக்களிடமிருந்து தினமும் வசூல் செய்து  வருகிறது. இந்நிலையில் சில தினங்களாக அமுதசுரபி நிறுவன கிளைகள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் கிளை அலுவலகம் மூடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சீட்டு பணம் கட்டிய பொதுமக்கள் நேற்று மாலை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில். 50க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மெரிகோ ஆண்டனி தலைமையில் அனைவரிடமிருந்து இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு, மேல்திகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில். சீட்டுப்பணம் கட்டிய பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கண்ணீர் மல்க கட்டிய பணம் கிடைக்குமா என்று  புலம்மிக் கொண்டு சென்றது ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.