

ஈ.சி.ஆரில், ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது செய்து, 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில் நீலாங்கரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி விசாரித்தனர், ஆட்டோவில் இருந்த நான்கு இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

தண்டையார் பேட்டை ரயில் நிலையத்தில் சவாரி ஏற்றி வருவதாக கூறினர். சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனால் நான்கு பேரையும் நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் குமார்(23), என்பதும் இவர் மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது, மகேஷ் குமார்(24), கானத்தூரை சேர்ந்த சின்ராசு(25), அனகாபுத்தூரை சேர்ந்த பூபதி(எ)சூர்யா(25), ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு ரயில் மூலம் கடத்தி வந்து தண்டையார்பேட்டையில் இருந்து ஆட்டோ மூலம் வந்த போது போலீசில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்து, 4 பேர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

