தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட நான்கு பேருக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். இதற்கு தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும். அவ்வகையில், மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான விஜயேந்திர பிரசாத் மற்றும் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கோவில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவைக்கு மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.