• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழா..,

ByP.Thangapandi

Jun 10, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட கல்லூத்து பகுதியில் தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்தின் கீழ் 3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் இணைந்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து உசிலம்பட்டி கண்மாய் பகுதியை பூங்காவாக மாற்றும் திட்டத்திற்கு 4 கோடி ஒதுக்கி தருமாறு அமைச்சர் மூர்த்தியிடம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கோரிக்கை வைக்க, கொன்றுவிடுவேன் உன் நிதியிலிருந்தும் கொஞ்சம் நிதி கொடு என அன்போடு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மேலும் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல்வரின் அறிவிப்பின்படி பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி விரைவில் பணி துவங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனிடையே பார்வட் ப்ளாக் கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. பார்வட் ப்ளாக் கட்சியினரை உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அமைச்சரும் நீதிமன்றம் செல்லுங்கள் வழக்கு போடுங்க என சொல்லி நழுவி சென்றார்.