• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98 வது பிறந்தநாள் விழா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் நாகர்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு 51 வார்டுக்கு உட்பட்ட உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமிகோவில் கலையரங்கத்தில் பாஜக பொருளாளரும் 51 வார்டு கவுன்சிலரும் மாநகராட்சி தெற்குமண்டல தலைவருமான டாக்டர் .பி.முத்துராமன் தலைமையில் வாஜ்பாய் திரு. உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்பு பாரத பிரதமர் மோடி மருத்துவ காப்பீடு திட்டம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜந்துலட்சத்திற்க்கான மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு அதன் விளக்கத்தையும் எடுத்துரைக்கப்பட்டது. .இதில் 50வது வார்டு பாஜக கவுன்சிலர் ஜயப்பன் ,கவுன்சிலர் வீரசூரபெருமாள்,மற்றும் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.