பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை அதிரடிப்படை காவலர்கள் தூக்கி சென்று காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க உதவி செய்தனர்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்து தூக்கி சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க செய்த அதிரடிப்படை காவலர்களை பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் டி.என்.ஹரி கிரன் பிரசாத் ஐ.பி.எஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 01.00 மணி வரை பொதுமக்கள் தங்களின் மனுக்களை நேரடியாக அளித்து வருகிறார்கள்.
அதேபோல் இன்றும் பொதுமக்கள் தங்களின் புகார் மனுக்களை கொடுக்க வந்தனர். மனு கொடுக்க ஒரு மாற்றுத்திறனாளி வருவதை பார்த்த அதிவிரைவுபடை காவலர்கள் விரைந்து சென்று மாற்றுத்திறனாளியை நாற்காலி மூலம் தூக்கி உதவி செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க செய்தனர். இந்நிகழ்வை பார்த்த அருகிலிருந்தவர்கள் வெகுவாக காவல்துறையினரை பாராட்டினர்.