காரைக்குடி நகரத்தில் அதிமுக கட்சியின் அமைப்புத் தேர்தல் முன்னாள் வருவாய்துறை
அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அவருடன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன் தேர்தல் பொறுப்பாளராக பங்கேற்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம் எல் ஏ , முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாகராஜன், கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகர செயலாளர் சோ.மெய்யப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கழக அமைப்பு தேர்தலில் பங்கேற்றனர்.