
அதிமுக ஆட்சியில் பலர் நல்லது செய்ததாக பேசிக்கொண்டாலும் தான் செய்த பணிகளை சுயவிளம்பரம் செய்ய தெரியாத ஒரு வெள்ளந்தி மனிதர் வெள்ளை நிறை வேஷ்டி சட்டைக்கும் வெள்ளந்தியான சிரிப்புக்கும் சொந்தக்காரர் கே.டி.ராஜேந்திர பாலாஜி .அதிமுக முன்னாள் அமைச்சர் குறித்த ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அருப்புக்கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் கிராமத்தில் பிறந்தவர்.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்த காலத்திற்கு ஏற்ப சொல்ல வேண்டுமென்றால் உண்மையான முரட்டு சிங்கிள் கேடி ராஜேந்திர பாலாஜி தான் திருமணம் செய்துகொள்ளாதவர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டபோது இவர் ஜெயலலிதா அணியில் திருத்தங்கல் நகர செயலாளராக இருந்தார்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிவகாசியின் பட்டாசு சட்டமன்றத்தில் ஒலிக்க தொடங்கியது. அதன் பிறகு தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சராக, 2016 ம் ஆண்டு பால்வளத்துறை அமைச்சாரகவும் பணியாற்றி உள்ளார்.


இவரை அமைச்சர் குறித்த தகவல்களை கேட்டறிந்தோம், இனி இவர் ஆற்றிய சில உன்னதமான செயல்கள் குறித்து பார்க்கலாம்.
ரூ.234 கோடி மதிப்பீட்டில் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் தொகுதிகளில் முடிவடைந்த தாமிரபரணி சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்ட தொடக்க விழா நடத்தினார். அதன் பிறகு ரூ.444 கோடி திட்ட மதிப்பீட்டில் சாத்தூர்,அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகராட்சிகளுக்கான தாமிரபரணியை நீர் ஆதாரமாக கொண்டு புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்.

மேலும் வள்ளநாடு கூட்டு குடிநீர் திட்டம். முக்கூடல் கூட்டு குடிநீர்; திட்டம். சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம். தாமிரபரணி கொண்டாநகரம் கூட்டு குடிநீர் திட்டம், சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் நகராட்சிகளுக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர்; திட்டம்,.
இராஜபாளையம் பாதாள சாக்கடை திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டு்ளளது. மேலும் விருதுநகர் இரயில்வே மேம்பாலத் திட்டம்,. இராஜபாளையம் இரயில்வே மேம்பாலத் திட்டம் ஆகியவை இவர் அமைச்சர் பொறுப்பில் இருந்த போதே நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் சிவகாசி, திருத்தங்கல் இரயில்வே மேம்பாலம்,.சிவகாசி-சாட்சியாபுரம் இரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஆய்வுப்பணி நடந்து வருகிறது. சிவகாசி புறவழிசாலை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. 3 கோடியில் இருக்கன்குடி குடிநீர் திட்டம் உட்பட ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில்தான் கொணடு வரப்பட்டு்ள்ளன.
விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 9 கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்த பெருமை கேடிஆரை சாரும். பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது கூட முதல்வன் பட அர்ஜுன் போல மக்களிடம் குடம் குடமாக பாலபிஷேகம் செய்வேன் என்று பொய் வாக்குறுதி அளிக்காமல் மக்களின் தண்ணீர் தாகத்தை போக்க பல கூட்டு குடிநீர் திட்டத்தை அளித்த முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜியை மக்கள் இன்றளவும் பதவியில் இருந்தாலும் இல்லையென்றால் கொண்டாடி வருகின்றனர்.
