• Sat. Mar 22nd, 2025

கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ByK Kaliraj

Mar 9, 2025

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காமராஜர் வித்யாசால பள்ளி வளாகத்தில் குறிஞ்சி கால் பந்தாட்ட குழு சார்பில் ஆறாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதனை சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராஜபாளையம் நகர செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமை வகித்தார். கால்பந்து போட்டி நிர்வாகிகள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.