• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கோவையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கின; வாகன சோதனையில் அதிரடி..,

ByS.Ariyanayagam

Mar 17, 2026

கோவையில் போலீசார் வாகன சோதனையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கி உள்ளன. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குழுவினர் வாகன தணிக்கையின் போது வெளிநாட்டு ரக மதுபானங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரத்தில் இன்ஸ்பெக்டர் குறிஞ்சி செல்வி தலைமையில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு காரை ஓட்டி வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனத்தில் 24 பாட்டில்கள் வெளிநாட்டு ரக மதுபானங்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாகனத்துடன் வந்த திண்டுக்கல் பழக்கனூத்தை சேர்ந்த ஜோத்தீஸ்வரன் (29) என்பவரை வாகனத்துடன் போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.