திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், சுமார் 30 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உணவகத்தில் சாப்பிட செல்வோர் இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI –யின் சான்றிதழ் உள்ளதா என கவனிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
உணவகங்களில் குளிர்சாதனப் பெட்டியின் கொள்ளவுக்கு ஏற்ப காய்கறி, இறைச்சி சேமிக்க வேண்டும் என்பதும், தடை செய்யப்பட்ட நிறமிகளை உணவுகளில் சேர்க்கக்கூடாது என்பதும் விதி.இதுமட்டுமின்றி உணவகங்களில் சமையலறைகளும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும் சமையலர்கள், உணவு பரிமாறுபவர்களும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதி என்கின்றனர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.
சமையல் செய்யும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமாக தண்ணீரை தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். அதே போன்று பரிமாறுபவர்களும், சமைப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பரிமாற பயன்படுத்தினால் பறிமுதல் செய்வதாக உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாக்கெட் உணவுகளில் காலாவதி தேதி, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் அளவை கண்காணிக்க வேண்டும் என்பது நுகர்வோருக்கான அறிவுறுத்தல்கள். உணவகத்தில் ஏதாவது குறைப்பாடுகள் இருந்தாலோ, உணவின் தரம், சுவையில் சந்தேகம் இருந்தாலோ 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகாரளிக்கலாம். இதன் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுத்து 48 மணி நேரத்தில் பதிலளிக்கப்படும் என உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உணவகத்தில் சாப்பிட செல்வோர் கவனத்திற்கு…
